Wednesday, August 7, 2013

இளையராஜா - இவன் ஒன்றும் உப்பளம் இல்லை உப்புக்கடல்

இளையராஜா
இவன் ஒன்றும் உப்பளம் இல்லை
மழைக்காய் குடைபிடிக்க
உப்புக்கடல்
இசை வள்ளல்
தன்னைத்தானே தகவமைக்கும் தவப்புதல்வன்
வியர்வையால் விதியை மாற்றியவன்
கனவுகளுக்கு கண்ணீர் பாய்ச்சாது
வெற்றியால் விடியல் தந்தவன்
சுற்றி சுற்றியே உலகம்
தன்னை புதுப்பித்துக்கொள்வது போல்
கற்றலாலே தன்னை புதுப்பித்துக்கொண்டவன்

வாழ்வின் தொகுப்புகள்
வரலாறாகும்
இளையராஜாவே வரலாறானார்
பல பூனைகள் புலி வேசம் போடுகையில்
இந்த புலி சத்தமே இல்லாமல்
இசையை அசைக்கத்தொடங்கியது

ஓடிக்கொண்டிருப்பவன் தானே
உயரத்தைத் தொடமுடியும்
வாய்ப்புகள் வாசல் வந்தன
அஸ்திவாரத்தை அகலப்படுத்தினான்
அவமானங்களை உரமாக்கினான்
இசையை தன் உலகமாக்கினான்

சர்வதிகாரியாய் இருந்த
சினிமாகோட்டையை தன்
இசையால் சரித்தவன்
இசை நோக்கியே முன்னகர்ந்ததால்
கருகொண்டவள் போல்
காலத்தில் முற்றிய கதிரானான்

பயிற்சியும் முயற்சியும்
அவன் மூச்சு
ஏலனப்படுத்திய இதழ்கள் எல்லாம்
அவனோடு புன்னகைக்கப் புறப்பட்டன
ஏவலாளாய்கூட ஏற்காத உலகம்
எஜமானனாய் ஏற்கக் காத்துக்கிடந்தது

தச்சன் மகன் தான்
உலகுக்கே கிருஸ்தவம் தந்தான்
அவமான சின்னத்தை ஆராதிக்கவைத்தான்
ஆடுமேய்த்த நபிகல்தான்
இஸ்லாமை தந்தார்
அவமானங்களின் அரங்கேற்றம்

தன் பயணம் தெரிந்தவர்கள்தான்
புது பாதை சமைப்பார்கள்
கேட்கப்படாத குயிலோசையாய்
அறியப்படாத மயிலாட்டமாய்
மறைந்து போகவில்லை
வாய்ப்புகளையேல்லாம் வசமாக்கினான்

பால் கிடைக்காத ஊரில் எந்த பூனையும்
சைவமாய் இருப்பதில்லை
வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால் - நீயும்
சைவபூனைகளாய் சாகவேண்டியதுதான்
எலிகள் உன்மேல் ஏறி விளையாடும்

பசித்தவனுக்கு உணவு கவலை
புசித்தவனுக்கு செரிமான கவலை
மழை கண்டு அழுவதற்கு
இவன் ஒன்றும் உப்பளம் இல்லை
உப்புக்கடல்
இந்த உப்புக்கடலில்
குளித்தெழும்பு
உனக்கும் ஞானம் வரும்

தந்தை வைத்த பெயர் ஞான தேசிகன்
அவருக்குத்தெரிந்திருக்கிறது
பள்ளியில் படித்தால்
ஞானம் கிடைக்காது என்று
அதனால் பள்ளியில் சேர்க்கும் போது
ராஜையா என பெயர் மாற்றிவிட்டார்
இசை பயில சென்றபோது
தன்ராஜ் மாஸ்டர்
ராஜா என்றே அழைத்தார்
அன்னக்கிளி இசையமைக்க சென்றபோது
பஞ்சு அருணாசலம் ஏற்கனவே
இசைத்துறையில் மூத்தவர் ஏ.எம். ராஜா இருப்பதால்
இவரை இளைய ராஜா என பெயர் மாற்றினார்
பள்ளியில் கிடைக்காத ஞானம்
பயிற்சியும் முயற்சியும் தந்ததால்
கலைஞர் இவரை இசை ஞானி என்றழைத்தார்

தந்தை ராமசாமியின் மனம்
கிருஸ்தவம் கவர்ந்ததால் தன் பெயரை டேனியல் என் மாற்றிக்கொண்டார்
விவசாய குடும்பம் சின்னத்தாயின் வயிற்றில்
4 மகங்களும் 2 பெண்களும் பிறந்தனர்
தாயின் தாலாட்டும்
நடவு பெண்களின் கிராமத்துப்பாட்டும்தான்
இளையராஜாவின் இதயத்தில்
இசையை விதைத்தவர்கள்

தன் அக்கா கமலம்பாவின் மகள்
ஜீவாவை தன் ஜீவனில் இனணத்துக்கொண்டதின்
பயனாய் 3 வாரிசுகளை இசைக்குத்தந்தார்
தன் அண்ணன் பாவலர் வரதராஜனுடன்
கடவுள் மறுப்பு கொள்கைக்காய் கம்யூனிஸ்ட் மேடையில்
தன் அண்ணனுக்கு உடல் நிலை சரியில்லாத காரனத்தால்
அன்னையின் உத்தரவின் பேரில்
திருச்சி பொன்மலை, திருவரம்பூரில்
முதல்முறையாக மேடை ஏறினார்
அதுவே தன் பள்ளி படிப்பிற்கு கடைசியாக முடிந்ததது
அவர்தான் இன்று ஆன்மீக இசைமுனி

நடிகர் விஜய்யின் தாத்தா நீலகண்டன் அவர்களால்
இளையராஜா குழுவினர்க்கு முதலில் சென்னையில்
அரங்கேற்றம் நடந்ததது
1990 தீபாவளி சமயத்தில் தன் தாய்
இறந்ததால் பன்னைபுரத்தில் தாயின் நினைவாய்
ஆலயம் கட்டி எல்லா தீபாவளியன்றும்
அங்கு செல்வது வாடிக்கையாக வைத்துள்ளார்
காந்த குரலுக்கு சொந்தக்காரன்
தன் அண்ணனின் குழுவில்
பாடியது எல்லாம் பெண் குரலில்தான்

நாடே மலேரியாவால் செத்துக்கொண்டிருந்தபோது
தமிழ் சினிமா பிழைக்க
மலேரியா இன்ஸ்பெக்டராக
பன்னைபுரம் சென்ற பாரதிராஜாவுக்கு
இளையராஜாவின் நட்பு தொடங்கியது
பாரதிராஜாவின் சென்னை அறையில்தான்
அன்று இளையராஜா சகோதரர்களுக்கு வாசம்
இளையராஜாவின் குழுவில் மூத்த கோரஸ் பாடகி
கமலம்மா இவரின் மூலமாகத்தான்
தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயில சென்றார்
அங்கே ஜி.கே. வெங்கடேஷ் தனக்கு நல்ல
உதவியாளர் தேவை என்ற போது
ராஜாவை அறிமுகம் செய்துவைத்தார்

இசைக் குறிப்புகளை எழுதிகொடுத்து
வாசிக்கச்சொல்லும் ஒரே இந்திய
இசையமைப்பாளர் இவர்தான்

Friday, August 2, 2013

ஈழம் - வானம்பாடிகளுக்காய் காத்திருக்கும் விடியல்கள்


ஈழம்

வானம்பாடிகளுக்காய்
காத்திருக்கும் விடியல்கள் 

வாழும் காலத்தில் நீ வரலாற்று நாயகன்
உன் காலத்திலேயே
விடுதலை எட்டாததுதான் 
வடுவாய் வந்த வருத்தம்

அலிகளின் மண்டபத்தில் நீயோர்
அதிசய ஆண்மகன்
விதையாய் இருந்த உணர்வுகளை
விருட்சமாய் வளர்த்தெடுத்தவன்

ஈழமே பற்றி எரிகையில்
உணர்வே இல்லாமல்
செக்குமாட்டின் நுகத்தடிகளில்
தமிழர் சிந்தனைகள் சிறைப்பட்டது

டாஸ் மார்க்கில் குவாட்டருக்காய்
சில்லறை தேடுவதிலேயே
நம் போராட்டம்
முடிந்துபோயிற்று

மூடி திறக்கச்சென்ற தலைவன்
வீடு திரும்பாததால்
தொலைக்காட்சியின் தொடர்களில்
தொலைந்து போன தலைவிகள்

தலைமுறைக்காய் சேமிப்பதாய்
தலைமுறைச் சோம்பேறி 
தருதலைகளை
தயார் செய்கின்றோம்

புத்தம் விதைத்த மண்ணில்
யுத்தத்தின் புதையல்
புறாக்கலெல்லாம் புல்லுருவிகளாய்
நண்பனே துரோகியாய்

நாக்கில் நீர்வடிய வாசல்தோறும்
மரண நாய்கள்
என் நினைவு முகங்கலெல்லாம்
கல்லறைகளாய்

பூவும் காற்றும் மௌனமாய்
இரத்தம் சுவாசிக்கும்
இருதய அறைகளில்
ஏக்கம் நிறைந்திருக்கும்

சூரியன் தொலைந்த
வரண்ட நதிக்கரைகள்
முள்ளிவாய்க்கால் மூலம்
இரத்தம் நிரப்பப்படுகிறது

கண்ணீர் துளிகளில்
உதிரும் இமைகள்
பசி சுமக்கும்
கழுதை வயிறுகள்

கூடிப்பேசி மகிழ்ந்து
தாயம் விளையாடிய
திண்ணைகளில்
சோகம் தூங்கிக்கிடக்கிறது

சூரிய சந்திரர்கள்
தொலைந்து போனார்கள்
நிகழ்காலமும் எதிர்காலமும்
இருட்டாய்..

வண்டுகளெல்லாம்
ஓலமிடுகின்றன
வண்ணத்துப்பூச்சிகளின் உடலெங்கும்
இரத்தம் வடிகிறது

வாழ்வை புரட்டிப்போட்ட சுனாமி
விழிகளில் இன்னும் தேங்கிக்கிடக்கிறது
ஊரே இறந்த பிறகு யாருக்காய் அழுவது
விழிகளில் ஈரமில்லை

சேய் வளர்த்த செடிகளெல்லாம்
பூவாய் பூவாய் பூத்திருக்கும்
பார்க்க ஆளின்றி
தோட்டக்களுக்கு இரையாய்

புத்தசிலைகளின் மேலெல்லாம்
மரணத்தின் சாம்பல் பூத்திருக்கும்
குழந்தையை பறிகொடுத்த
தாய்களின் மார்களில் இரத்தம் வடிந்திருக்கும்

நடைவண்டி பார்ப்பதர்க்குமுன்
ராணுவவண்டி பார்க்கும் எம் குழந்தைகள்
வானம்பாடிகளுக்காய்
காத்திருக்கும் விடியல்கள் 

Thursday, August 1, 2013

வாலி - கவிதை சுரந்த எந்திரக் கவிஞன்


காசு போடும்போதெல்லாம்
எடை சொல்லும் எந்திரம் போல்

கவிதை சுரந்த

எந்திரக் கவிஞன்

தலைமுறைகள் தாண்டிய

தந்திர மனிதன்

சொற்களுக்குள் சூழ் போட்ட

சுந்தர புருஷன்

மொட்டுக்குள்ளே மகரந்தம் தூவிய

மந்திரக் கவிஞன்

மெட்டுக்கெல்லாம் மெனக்கெடாமல்

சட்டென்று சரணடையும் சொல் சுரங்கம்

சொல்லாத சொல்லுக்கெல்லாம்

அவனே அரங்கம்

ஆரிய கரு சுமந்த

சூரிய புத்திரன்

நிலவு பால் குடித்த

சமத்துவ ஸ்ரீரங்கன்

உயிரோடு உள்ளவரை

மதம் பிடிக்காத உனக்கு

மறைந்த உன் பிணத்தின்மேல்

வைனவம் வரைந்ததுதான் இந்த சமூக பினக்கு

மறைவுக்காய் வருந்தும் - மறை