Thursday, January 26, 2012

நீயும் வீரிய விதைதான்










நீ ஆல விழுதா ?
அவரை வேரா?
அடையாளபடுத்திக்கொள்

அடுத்த தலைமுறைக்காய்
விழுதுகள் தயாரிப்பது ஆல்

அடுத்த வேலை பசி தீர்க்க
அரை நாளில் வேர்விடுவது அவரை

எல்லா விதைகளும்
விழுதுகள் தயாரித்தால்

எதிர்கால நிழல்களில்
பசி., பாய் விரித்து படுத்துரங்கும்

நீ அவரையாய் இருப்பதில்
ஒன்றும் அவமானமில்லை

நீ விழுதாகவில்லை என
வருத்தம் வேண்டாம்

விதை பழுதாயிருந்தால் தான்
பாதகம்

நீயும் வீரிய விதைதான்

Saturday, January 7, 2012

உலகம் பரினமித்தே துளிர்த்தது-புத்தர்
















பூஜையும் புனஸ்காரங்களையும் மதமாக்கி
பாவங்களையெல்லாம் பரிகாரமாக்கி
பொய்மேல் கடவுளைக்கட்டி
கட்டுக்கட்டாய் கதைகளைக்கூட்டி
குப்பைகளையெல்லாம் மனங்களில் கொட்டி
மூட நம்பிக்கையை கருவறையில் பூட்டி
கோயில்களில் கொட்டமடித்து
கனவைத்தின்று
கவலைகள் கொன்று
கடமையில் வாழ்வோர் மத்தியில்
மாசற்ற மாணிக்கமாய்
சுத்தோதனருக்கும்
மகாமாயாவுக்கும் மகனாக கி.மு563.ல் பிறந்தார்

அரச வாழ்க்கை உனை
அணைக்கத்துடிக்கையில்
துறவு வாழ்க்வை
துணைக்கழைத்தவனே
உறவுக்காய்
துறவு கொண்டவனே-அன்று
கபிலவஷ்துவே
காவி கட்டியது

துக்கம் தோய்ந்தது
சுத்தோதனரின் முகம்
உன் துறவு கடவுளை கானவோ
சொர்க்கம் அடையவோ அல்ல

நதி நீருக்காக மக்கள் நலன் காக்க
அனைவரின் அமைதிக்காய்
ஆட்சி துறந்தவன் நீ மட்டும்தன்

அரசகுமாரன் துறவு கொண்டதால்
ஓர் கல்லாத்தி மரம் அரசமரமானது
உனக்கு ஞானம் வந்ததால் அதுவும்
போதிமரமானது

நீ அமர்ந்ததால் மரத்துக்கே பேரு
ஏனோ மறந்தது
உன்னை உள்ளூரு

உலகெல்லாம் கிளை வளர்த்த
உன் வேர்களுக்கு உள்ளூரில்
ஜாதியும், மதமும் சுய நலமும்
வெந்நீர் ஊற்றி
ஆசை வளர்த்தார்கள்


உன் பல்லை வைத்து
புத்தம் போற்றும் தேசத்தில்
யுத்தம் போற்றும் அவலம்- இன்றோ
உன் பல்லெல்லாம் இரத்தம் கசிகிறது

யுத்தம் மறுத்து
புத்தரானவனே உன் தேசமெல்லாம்
யுத்தம் போற்றி
புத்தம் மறந்தனரே

இறைவனே இல்லாதபோது
இடைத்தரகர் எதர்க்கு
கட்டுப்படுத்த தெரியாத உணர்வுள்ளவர்கள்
உலகை வழி நடத்த முடியாது
பொய்கள் இங்கே சத்தியமாய்
போலிகள் சாத்தியமாய்
உண்மைகள்யாவும் ஊமைகளாய்

தத்துவத்தின் தலைமையிடம் நீ
பல மதங்களுக்கு
மார்க்கமாயிருந்தவன்
மார்க்சிஸ்ட்டுக்கள்
கொள்கை எடுத்தது உன்னைடமே
டார்வின் கொள்கைக்கும்
ஏங்கள்ஸ் சிந்தனைக்கும் கருதந்தவன்
தந்தை பெரியாரின்
கொள்ளுத்தாத்தன் நீ

தேசத்தின் முகவரி மத
வேசத்தின் முதல் எதிரி நீ
மோட்சத்திற்கு முனியானவர்கள் மத்தியில்
மக்களுக்காய் முற்றும் துறந்தவன்

ஆரிய கிரகணத்தில் உன்
சூரிய புத்தம் இருண்டே போனது
பிறைகளின் படையெடுப்பால் புத்தம்
பக்கத்து தேசத்துக்கு
நாடுகடத்தப்பட்டது
உலகுக்கே அறிவு சொல்லித்தந்த
நாலந்தா நாசப்படுத்தப்பட்டன

வேத சாக்கடையில்
விளைந்த சந்தன மலரே உன்னால்
உலகே மனந்தாலும்
உள்ளூர் பன்றிகள் மஹாயான சாக்கடையில்
உன் சந்தனத்தை
கரைத்துவிட்டனர்

உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை
பரினமித்தே துளிர்த்தது
என்றவனே
கடளை மறுத்த உன்னையே
கடவுளாக்கிய காட்டுமிரண்டிகள் நாங்கள்

கார்ல் மார்க்ஸ் சொன்னது போல்
குறை சொல்லியழ
கொடு என்று கேட்க
கண்ணுக்கு தெரியாத
கைக்கு அகப்படாத ஓர்
கடவுள் தேவைபடுகின்றான்

ஊமையின் உளறல்
















வாழ்த்திய உள்ளங்களுக்கெல்லாம் நன்றி
இது என் தொல்லை தாங்க முடியாமல்
என் அப்பா என்னை பள்ளிக்கு
துரத்திய நாள்

மன்னித்துவிடுங்கள்
பொய் சட்டமான நாள்

சட்டம் சரியென்பதை
இதயம் ஏற்க மறுப்பது இப்படித்தான்

பொய்களோடும் சாட்சிகளோடும்
சட்டம் சத்தமிட்டுக்கொண்டிருக்கையில்

உண்மைகள் உள்ளத்தில் எப்போதும்
ஊமையாகிறது