Monday, March 12, 2012

சாதிக்கச்சொன்னவனே சாதிக்க காத்திருக்கோம்



























நினைத்தாலே நிறை நெஞ்சில்
நெருப்பெரியும்

இமை தாண்டி விழி நீரும்
பெருக்கெடுக்கும்

மலர்ச்செடியல்ல நீ
தீச்செடி

தீயாய் பூ பூத்து
திசையெங்கும் தீ வளர்த்தாய்

வேர்களை விற்று
பூக்களாய் சிரித்திருந்தாய்

போராளியாய் இருந்த நீ எப்படி
ஞானியைப்போல் போதும் என்று முடிவெடுத்தாய்

நீ உழைத்து உருவாக்கிய உப்புக்கடல் இப்போது
கானல் நீரானதே

ஓட்டை படகில் ஊர் தேடும் எங்களுக்கு
கலங்கரையாய் உன் ஞாபகங்கள்

உன் ஞாபகமழையில்
குடைகள் கிழிகின்றன


மரங்கள் காற்றின் கறை வெளுப்பது போல் உன்
மரணம் பலரின் குறை தொடைத்ததுவே

எத்தனை செவிகளுக்கு
உன் பெயர் தேனை பாய்ச்சியிருக்கும்

குறைகொண்ட நெஞ்சங்கள்
நின் பெயர் சொல்லி நிறைந்திருக்கும்

ஆதிக்கசக்திகள் சோதிக்க நினைத்து
சாதித்து நின்ற உனை சாய்த்தேவிட்டனரே

தலை தொங்கி நின்றதனால்
வெறும் பழுதென நினைத்தனரோ

விழுதாய் தலை நிமிரும் கூட்டம்
உன் கூட்டம்

வீழ்ந்துவிட்டதனால் விறகல்ல நீ விதை
விருட்ஷமாய் வளர்த்தெடுப்போம்

நீ நிறைந்த இடம் தேடி
நெஞ்சம் பனித்திருக்கும்

வானிருந்து வாழ்த்து வரும்
விழித்துடைக்க காற்றுவரும்

திசைகள் தெரியாது
செய்வதுமறியாது
நட்டாற்றில் நின்றபோதும்
துடுப்பாய் உன் பெயர்தந்து
சாதிக்கச்சொன்னவனே
சாதிக்க காத்திருக்கோம்
உன் பெயரைக்காத்திருப்போம்

Sunday, March 4, 2012

இருவரின் தேடல்-காதல்



















இருவரின் தேடல் காதலாய் தொடக்கம்
எதிர்பார்ப்பும் தேவைகளும்
தீரும் என்பதன் தேடலின் முடிவில்
திருமணத்தொடக்கம்

உண்மையைத்தேடி
உடலைத்தாண்டி
உள்ளத்தை தந்தவர்களுக்கு
திருமணம் ஓர் சுகம்

பொய்யைத்தேடி
தேக சுகம் நாடி
போலியாய் இருந்தவர்களுக்கு
திருமணம் ஓர் சோகம்


சுகம் தேடிகளின் கால்கள்
விடுதலை வேண்டி இன்று
நீதி மன்றங்களின்
படிகட்டுகளில்

ஊரே எதிர்த்து
ஓடிவந்தவர்கள் இன்று
உலகே பார்க்க ஓற்றை கயிறில்
தொலைந்து போனார்கள்

ஒற்றை பார்வையில்
உயிர் வாழ்ந்தவர்கள் இன்று
வயிற்றுப்பசியில்
வாழ்விழந்தார்கள்

நெற்றி வேர்வையில்
நிலாவை கண்டவர்கள் இன்று
குற்றம் கண்டே
குமைந்து போயினர்

குயிலாய் ஒலித்த
கோதையின் குரலின்று
கோட்டனானின் குரலாய்
காதைக்கிழிக்கிறது

மூச்சுக்காற்றில்
உடல் சிலிர்த்த தேகமின்று
மூச்சை நிறுத்த
துடியாய் துடிக்கிறது

அவள் முகம் மட்டுமே
அழகாய் தெரிந்த கண்களுக்கு இன்று
அவளைத்தவிர
அனைவருமே அழகாய் தெரிகிறது

ஒற்றை இதழ் முத்தத்திற்காய்
கொக்காய் நின்றவர்கள் இன்று
யுத்தமே சத்தமாய்
முடமாகிப்போனார்கள்

காலடி ஓசைக்காய்
காத்திருந்த காதுகள் இன்று
மனமுறிவு தீர்ப்புக்காய்
தவம் கிடக்கிறது

கால்நக அழுக்கை
களைந்த அவன் கண்களுக்கு இன்று
கண்ணீரில் மிதக்கும் அவள்
கவலைகள் தெரியவில்லை

உடல் தேடி உறவாடும் காதல்
கூடிப்பிரிந்திடும். வேறோர் உடல் தேடி...
உளம் தேடி உறவாடும் காதல்
நாடி உயிர்க்கூடி விழுதாய் வேர்விடும்

Thursday, January 26, 2012

நீயும் வீரிய விதைதான்










நீ ஆல விழுதா ?
அவரை வேரா?
அடையாளபடுத்திக்கொள்

அடுத்த தலைமுறைக்காய்
விழுதுகள் தயாரிப்பது ஆல்

அடுத்த வேலை பசி தீர்க்க
அரை நாளில் வேர்விடுவது அவரை

எல்லா விதைகளும்
விழுதுகள் தயாரித்தால்

எதிர்கால நிழல்களில்
பசி., பாய் விரித்து படுத்துரங்கும்

நீ அவரையாய் இருப்பதில்
ஒன்றும் அவமானமில்லை

நீ விழுதாகவில்லை என
வருத்தம் வேண்டாம்

விதை பழுதாயிருந்தால் தான்
பாதகம்

நீயும் வீரிய விதைதான்

Saturday, January 7, 2012

உலகம் பரினமித்தே துளிர்த்தது-புத்தர்
















பூஜையும் புனஸ்காரங்களையும் மதமாக்கி
பாவங்களையெல்லாம் பரிகாரமாக்கி
பொய்மேல் கடவுளைக்கட்டி
கட்டுக்கட்டாய் கதைகளைக்கூட்டி
குப்பைகளையெல்லாம் மனங்களில் கொட்டி
மூட நம்பிக்கையை கருவறையில் பூட்டி
கோயில்களில் கொட்டமடித்து
கனவைத்தின்று
கவலைகள் கொன்று
கடமையில் வாழ்வோர் மத்தியில்
மாசற்ற மாணிக்கமாய்
சுத்தோதனருக்கும்
மகாமாயாவுக்கும் மகனாக கி.மு563.ல் பிறந்தார்

அரச வாழ்க்கை உனை
அணைக்கத்துடிக்கையில்
துறவு வாழ்க்வை
துணைக்கழைத்தவனே
உறவுக்காய்
துறவு கொண்டவனே-அன்று
கபிலவஷ்துவே
காவி கட்டியது

துக்கம் தோய்ந்தது
சுத்தோதனரின் முகம்
உன் துறவு கடவுளை கானவோ
சொர்க்கம் அடையவோ அல்ல

நதி நீருக்காக மக்கள் நலன் காக்க
அனைவரின் அமைதிக்காய்
ஆட்சி துறந்தவன் நீ மட்டும்தன்

அரசகுமாரன் துறவு கொண்டதால்
ஓர் கல்லாத்தி மரம் அரசமரமானது
உனக்கு ஞானம் வந்ததால் அதுவும்
போதிமரமானது

நீ அமர்ந்ததால் மரத்துக்கே பேரு
ஏனோ மறந்தது
உன்னை உள்ளூரு

உலகெல்லாம் கிளை வளர்த்த
உன் வேர்களுக்கு உள்ளூரில்
ஜாதியும், மதமும் சுய நலமும்
வெந்நீர் ஊற்றி
ஆசை வளர்த்தார்கள்


உன் பல்லை வைத்து
புத்தம் போற்றும் தேசத்தில்
யுத்தம் போற்றும் அவலம்- இன்றோ
உன் பல்லெல்லாம் இரத்தம் கசிகிறது

யுத்தம் மறுத்து
புத்தரானவனே உன் தேசமெல்லாம்
யுத்தம் போற்றி
புத்தம் மறந்தனரே

இறைவனே இல்லாதபோது
இடைத்தரகர் எதர்க்கு
கட்டுப்படுத்த தெரியாத உணர்வுள்ளவர்கள்
உலகை வழி நடத்த முடியாது
பொய்கள் இங்கே சத்தியமாய்
போலிகள் சாத்தியமாய்
உண்மைகள்யாவும் ஊமைகளாய்

தத்துவத்தின் தலைமையிடம் நீ
பல மதங்களுக்கு
மார்க்கமாயிருந்தவன்
மார்க்சிஸ்ட்டுக்கள்
கொள்கை எடுத்தது உன்னைடமே
டார்வின் கொள்கைக்கும்
ஏங்கள்ஸ் சிந்தனைக்கும் கருதந்தவன்
தந்தை பெரியாரின்
கொள்ளுத்தாத்தன் நீ

தேசத்தின் முகவரி மத
வேசத்தின் முதல் எதிரி நீ
மோட்சத்திற்கு முனியானவர்கள் மத்தியில்
மக்களுக்காய் முற்றும் துறந்தவன்

ஆரிய கிரகணத்தில் உன்
சூரிய புத்தம் இருண்டே போனது
பிறைகளின் படையெடுப்பால் புத்தம்
பக்கத்து தேசத்துக்கு
நாடுகடத்தப்பட்டது
உலகுக்கே அறிவு சொல்லித்தந்த
நாலந்தா நாசப்படுத்தப்பட்டன

வேத சாக்கடையில்
விளைந்த சந்தன மலரே உன்னால்
உலகே மனந்தாலும்
உள்ளூர் பன்றிகள் மஹாயான சாக்கடையில்
உன் சந்தனத்தை
கரைத்துவிட்டனர்

உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை
பரினமித்தே துளிர்த்தது
என்றவனே
கடளை மறுத்த உன்னையே
கடவுளாக்கிய காட்டுமிரண்டிகள் நாங்கள்

கார்ல் மார்க்ஸ் சொன்னது போல்
குறை சொல்லியழ
கொடு என்று கேட்க
கண்ணுக்கு தெரியாத
கைக்கு அகப்படாத ஓர்
கடவுள் தேவைபடுகின்றான்

ஊமையின் உளறல்
















வாழ்த்திய உள்ளங்களுக்கெல்லாம் நன்றி
இது என் தொல்லை தாங்க முடியாமல்
என் அப்பா என்னை பள்ளிக்கு
துரத்திய நாள்

மன்னித்துவிடுங்கள்
பொய் சட்டமான நாள்

சட்டம் சரியென்பதை
இதயம் ஏற்க மறுப்பது இப்படித்தான்

பொய்களோடும் சாட்சிகளோடும்
சட்டம் சத்தமிட்டுக்கொண்டிருக்கையில்

உண்மைகள் உள்ளத்தில் எப்போதும்
ஊமையாகிறது