Wednesday, September 21, 2011
Sunday, September 18, 2011
கருவரை காட்டிய பெரியார்

ஆரிய இருட்டில் பூத்த
சூரிய சுயமரியாதை
மூட தமிழர்களை தத்தெடுத்ததால்
தந்தையான பெரியார்
வேத மூட்டைகளை காசியில் வெளுத்ததால்
பேத வேட்டைகளை அடித்து துவைத்தவர்
ஊரே வெள்ளையனுக்கு எதிராய் - நீ மட்டும்
உள்ளூர் கொள்ளையனுக்கு எதிராய்
சமூகம் ஒதுக்கிய சிறியார்கெல்லாம்
கருவறை காட்டிய பெரியார் நீமதம் தாண்டும் மகளிர்க்காய்
ஜாதி தாண்டும் மனிதர்க்காய்
மதமழிக்க மதம் கொண்டாய்
எல்லோரும் மலருக்கு சாமரம் வீசும் போது
நீ மட்டும்தான் வேருக்கு வைத்தியரானாய்
விழுதுகளையும் பழுது பார்த்தாய்
இன்றோ
உன் இடம் நிரப்பப்படாமல்...
விழுதுகள் பழுதாய்...
Subscribe to:
Comments (Atom)


