
மறுத்ததாய் வெறுத்ததாய்
நடித்தத் துறவிகளின்
துகிளுரித்த காமம்
ஆசையடக்கிய ஆன்மிகத்திற்கு நடுவே
ஆசைப்படவைத்த
முதல் குரு
காமத்தின் முடிவிலிருந்து
கடவுளை தேடியோர் மத்தியில்
காமத்திலிருந்து கடவுளை தேடியவன்
கடவுளற்ற ஆன்மீகம்
கட்டற்ற சுதந்திரம் - மாற்றாருக்கு நீ
குழப்பத்தின் குரு
கடலாய் சுதந்திரம் கொண்ட
காமத்தை சுமந்த உன் கொள்கையால்
உலகம் உருண்டு உன் காலடியில் கிடந்தது
காமத்தை கொண்டாட
கடவுளை எளிதாக்க
கூடிய கூட்டம் கண்டு
பழைய மதவாதிகள் கொண்ட பயம்
உன் கால்தடம் பதிய
21 நாடுகளில் தடா
உலகம் சுற்றிய பின் தான்
நம் நாட்டு சகிப்புத்தன்மை புரிந்தது உனக்கு
திரும்பும் திசையெங்கும்
சித்திரை திருவிழாக்கள்
தெய்வீகம் ஆர்பரிக்கும்
மைக்செட் கட்டிய
மார்கழி கொண்டாட்டம்
மாற்று மதத்தவர் காதுகள் கிழித்தெடுக்கும்
ஹோலி பண்டிகை வந்தால்
அடுத்தவர் மீது சாயம் பூசி
அத்துமீறும் அநியாயம்
ஆனாலும் எமக்கு
எம்மதமும் சம்மதம்
உம்மதமும் சம்மதம்
எங்களின் மத சகிப்புத்தன்மைக்கு
ஒர் சாட்சி
சிவனைத்தவிர வேறோர்
தெய்வம் உண்டென்று சொல்லும்
அறிவ்ற்றவர்களை கண்டு நான் அஞ்சுவேன்
"புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்!
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றைவார் சடை எம் அண்ணல் கண்ணுதல்
பாத நண்ணி
மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற்
கற்றில்லாத அவரைக் கண்டால் அம்ம!
நாம் அஞ்சும் ஆறே"
என்ற மாணிக்கவாசகரின்
சிவனைப்புகழ்ந்த திருவாசகத்தை
இளையராஜாவின் "ஆரோட்டா"வை
வெளியிட்டது ஓர்
கத்தோலிக்க கிருத்துவ பாதிரியார்
நீயோர் ஆன்மீக அணுகுண்டு
ஆன்மீக அனாதைகளையும்
கடவுளை வெறுத்தவர்களையும் கூட
காமத்தால் இணைத்தவன்.















