Sunday, November 26, 2017

தலைவனுக்காக தலைமுறை தவம் கிடக்கிறது

அடிமை ஆடுகளுக்காய்
நரிகள் நாட்டாமை
செய்கின்றன

நாட்டு மருந்து கடை வைத்திருந்தவரின் வாரிசுகள்
இன்று நாட்டின் பணக்காரர்களின் வரிசையில்
பட்டியலிடுகிறார்கள்

உழைத்து வளர்ந்திருந்தால் ஊர் காரனென்று
பெருமை பட்டிருக்கலாம்
ஊரை வளைத்து உலையில் போட்டுள்ளனர்

தவறு செய்து தண்டனை பெற்று
சிறை சென்றதெல்லாம்
தலைவனாகுவதற்கு தகுதியாகிவிட்டன

பூசாரிகளெல்லாம் கடவுளாய்
அவதாரமெடுத்துவிட்டனர்
சாமியார்களெல்லாம் சல்லாப வகுப்பெடுக்கிறார்கள்

தெய்வமே திருடனாகியப்பின்னே
கோயிலுக்கும் கற்பகிரகத்திற்கும்
மதிப்பிங்கேது

தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள்
தலைமைப்பதவியில் இருந்தால்
தகரங்கள் தங்கமாகின்றன

குப்பைகளே கோபுரங்களாகியதால்
முடை நாற்றம் இங்கு
மூக்கைத்தொலைக்கிறது

தலைமையின் தனிமனித பலவீனம்
பல தலமுறைகளை தடுமாறவைத்துவிட்டது
எம்ஜிஆர் மிச்சம் வைத்ததை ஜெயலலிதா உச்சம் தொட்டார்

தலைவனும் கடவுளும் இல்லாமல் தமிழனின்
தனிமனித வாழ்வே முடிவதில்லை
எவன் காலையாவது கழுவி குடிக்கவேண்டும்

அது கல்லாகவும் இருக்கலாம் பிணமாகவும் இருக்கலாம்
தலைவனுக்காக தலைமுறை
தவம் கிடக்கிறது

தேசம் நாசமாகிவிட்டது


தேசம் நாசமாகிவிட்டது
பாசிசம் என்பது பிற்போக்குத் தனமானது மட்டுமல்ல. 
ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட. மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல், வலுவான தலைமையை
வலியுறுத்தும் டார்வினிய தத்துவத்தின் அடிப்படையில் அணுகும் ஓர் சர்வாதிகாரமாகும்.
வலிமையான ஜனநாயகமே ஓர் சர்வாதிகாரம்தான் மோடியும் லேடியுமே இதற்கு உதாரணம்

கோடிக்கணக்கான இந்தியர்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசு துடிக்கிறது. ‘லாபம் தனியாருடையது, நஷ்டம் மட்டும் மக்களுக்கு.
‘ஷ்ரமேவ ஜயதே’ திட்டம் துவக்கப்பட்டது. மோ\டி சொல்கிறார் உழைப்பாளிகள் ‘யோகிகளாம்’!! ஆமாம் யோகிகளுக்கு பொருள் தேவை இல்லை திருடர்கள் முதலாளியானதால் 

பதவியேற்ற 6 மாதங்களில் ஏகப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்
அவருடைய ஆறு வெளி நாட்டு பயணத்தில் ஐந்து தடவை பெருமுதலாளி அதானியை உடன் அழைத்துச் சென்றார். 
பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அதானிக்கு 6500 கோடி ரூபாய் கடன் வழங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. 
அதானிக்கு ஏற்கனவே 60ஆயிரம் கோடிரூ கடன் பாக்கி உள்ளது. 
சாமானியரின் பயிர் கடனை திரும்பத் தராவிடில், டிராக்டரை பறிமுதல் செய்கிறது. அதானிக்கு 6500 கோடி ரூபாய் கடன் உதவி

விவசாயிகளின் தற்கொலை 26٪ அதிகமாகயுள்ளது, கடந்த 5 வருடங்களில் கண்டிராத அளவிற்கு, ஏற்றுமதி 11٪ இறங்கு முகத்தில் இருக்கிறது. 
மோடி அரசுக்கு, ஒரே சாதகமான விஷயம், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை 40٪ குறைக்கப் பட்டிருக்கிறது. 
ஆனால், பெட்ரோல் விலையோ தினந்தோறும் ஏறிக்கொண்டேயிருக்கிறது. 
பெட்ரோல், டீஸல் மீது வரி விதிப்பின் மூலம் சென்ற ஆண்டை விட ரூ 75,000/- கோடி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கிறது. 

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைத்திருக்கப்படும் கறுப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் செலுத்தும் என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் உறுதியளித்தார்.
‘ஜன்தன்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் இத்திட்டதின் கீழ், அரசு துவங்கியிருக்கும், 
14 கோடி வங்கிக் கணக்கில் 75٪ கணக்குகள் இது வரை 0 Balanceல் தான் இருக்கிறது. மோடி பணம் போடுவார் என காத்திருக்கிறார்கள்
பணமதிப்பு நீக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
ஜிஎஸ்டி உற்பத்தித் துறையை மேலும் முடக்கி போட்டது. முதலீடுகள் குறைந்ததால் தொழில்துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் பலரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது. 
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 
26% அதிகரித்துள்ளது. ஒருபுறம் கிராமப்புறப் பொருளாதாரம் அழிவு நிலையில் 
மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 
இந்த அரசு யாருக்குச் சாதகமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மூதேவி ஒருவரை நாம் திட்டவேண்டுமென்றால் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல். 
செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக மூதேவி பயன்படுத்துகின்றனர்
மூதேவி சனீஸ்வரனின் மனைவியாக இந்துக்களால் போற்றப்படுகிறார். 
திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.
இவரின் மற்றபெயர்கள் தவ்வை, ஜேஸ்டா, மூத்ததேவி, மோடி என அழைக்கப்படுகிறாள். 
திருமகளின் அக்கா நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். 
ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக கருதப்படுகிறது. 
மோடியை திட்டுவதற்கு தமிழ் தடுக்கிறது

தீபாவளி

மாற்றமே முன்னேற்றம்
பூமி தட்டையாக உள்ளது என்ற கிருஸ்தவர்கள்
உருண்டை என்று அறிந்த பின்பு
தங்களின் புனித நூலையே மாற்றிவிட்டார்கள்
அறியாமை விலங்கின் குணம்
அறிந்து திருந்துவது மனித இயல்பு
மாறவே மறுக்கும் இந்துமதங்கள்
பூமி இன்றும் தட்டையாக உள்ளது என்று பிடிவாதமாக
தீபாவளிகளை கொண்டாடிக்கொண்டுள்ளார்கள்

நதிகளையும் மலைகளையும் மரங்களையும்
தெய்வமாக வழிபடும் இந்துக்கள்
அந்த பூமாதேவியையே வேசியைபோல்
ஒரு பன்னி உறவு கொண்டு அசுரன் பிறந்த கதைதான் தீபாவளி
அந்த பன்னி வேறு யாறுமல்ல
மகா விஷ்ணு ஒரு கடவுளுக்கு பிறந்த பிள்ளை
எப்படி அசுரனனாக பிறக்ககமுடியும்
அந்த அசுரனனை கொன்றுதான்
தீபாவளியை கொண்டாடிக்கொண்டுள்ளோம்

வியாபாரிகளும் அவர்களுக்கு உதவும் ஓட்டுத்திருடர்களும்
வார்த்தை விளையாட்டு நடத்தி
தீபத் திருவிழாவாக திருத்திக்கொண்டுள்ளார்கள்
என்னவென்றே தெரியாது திரிகளுக்கு
தீ வைத்துக்கொண்டுள்ளது ஒரு தலைமுறை

தன்னிலிருந்து ஏற்படும் மாற்றமே சரியான மாற்றம்
அடுத்தவனிலிருந்து ஏற்படும் மாற்றம் ஏமாற்றம்
16 வயதிலிருந்து தொடர்ந்து
16 ஆண்டுகள் போர் புரிந்து
இறந்துபோனான் அலெக்சாண்டர்
வலியும் துன்பமும்தான் அவன் வாழ்க்கை

அவனுக்கு தெரிந்ததெல்லாம் போர் ஒன்றே
போரே உலகை வெல்லுமென்ற
தனியாத தாகம் கொண்ட
ஒரு மன நோயாளியை
மகத்தானவன் என்று உலகம்
கொண்டாடுகிறது

பெண், பொன் பொருள்
தேவைக்கு மேல் சேரும்போது
அதிகாரபோதையும் மனச்சிதைவும்
மனிதனை மன நோயாளியாய் மாற்றிவிடுகின்றது

உலக மாற்றமெல்லாம்
அடுத்தவனை மாற்றவே முயன்று தோற்றுப்போயுள்ளது
ஒரு சர்வாதிகாரியை அழித்து
மற்றொறு சர்வாதிகாரியை அமர்த்தும் வேலையை
ஒரு சர்வாதிகாரியே செய்து கொண்டுள்ளான்

தன்னைத்தானே மாற்றி
அலெக்சாண்டரைவிட அதிகமாக
தேசத்தையும் நேசத்தையும் வென்றவன்
நாட்டையும் வீட்டையும் துறந்த புத்தனே

மாமன்னன் அசோகர் புத்தமதத்திற்கு மாறிய நாளை
புத்த மதத்தினர் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்
மகாவீர் நிர்வானம் அடைந்த நாளை ஜெயினர்கள்
தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்

கொண்டாட்ங்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கம்
வேண்டாமா பூமியின் புதல்வர்களே

இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்
++++++++++++++++
ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் 
அரசி ஜோகாஸ்டா 
மூட நம்பிக்கையால் தீய சகுனங்களுக்கு அஞ்சி
சோபாகிளிஸ் (sophocles) என்ற தன் மகனை
சாமியார்களின் பேச்சைக்கேட்டு
காட்டுக்குள் விட்டு விடுகிறார்கள்

சோபாகிளிஸ் வளர்ந்து வாளிபனாக
நாட்டுக்குள் வருகின்றான்
சூழல் தாயுக்கும் மகனுக்கும் காதல் உருவாகிறது
காதல் உறவாய் தொடர்கிறது
இந்த சிக்கலான உறவை
சிக்மண்ட் பிராய்டு (oedipus complex) இடியாபஸ் சிக்கல் என்கிறார்
உண்மை தெரிந்து தங்களை தாங்களே
தண்டித்துக்கொள்கிறார்கள்

தமிழகம் இப்போது இடியாப்ப சிக்கலிலோ
சிக்மண்ட் பிராய்டு சொன்ன இடியாபஸ் சிக்கலிலோ
சிக்கித்தவிக்கிறது
தவரான தலைமையை தேர்ந்தெடுத்ததற்கான
தண்டனையை மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர்
அசுரனையும், ஆங்கிலயனை எதிர்த்த நம்மாள்
அரசியல்வாதிகளையும்
கொசுக்களையும் வதைக்கமுடியவில்லை
வதைபட்டுக்கிடக்கிறோம்

தமிழ்நாட்டில் நாகப்பட்டிணத்திற்கு அருகில் உள்ளது சிக்கல்
சிக்கல் தீர்வை நோக்கிய நகர்வுக்கான இடம்
வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணெயினால் செய்த சிவலிங்கம்
அமைத்து வழிபட்ட பின்னர், அதனை எடுக்கமுடியாது
சிக்கிக்கொண்டமையால் அந்த இடத்தை சிக்கல் எனப்பெயர்பெற்றது.

முருகப் பெருமான், சூரனை வதைக்க
அம்பிகையிடம் வேல் பெற்ற இடமாகவும் சொல்லப்படுகிறது
தமிழகமே சூரர்களால் சிக்கி சிக்கலில் இருக்கும்போது
பாட்டன் முருகப் பெருமான் வேல்கொண்டு ஏன் வரவில்லை

உண்மையிலேயே என் பாட்டனின் பெயரும் முருகன்
உழைப்பாளி சேவலுக்குமுன் கூவிவிடுவார்
தாத்தாவின் வீட்டுக்கு செல்வதென்றால் அவ்வளவு சந்தோசம்
அவரின் பாசம் வார்த்தைகளில் தெரியாது
அவர் ஓர் காட்டுமரம் இலைகளின் பசுமைக்காக
வேராய் இருந்து வேர்வை சிந்தியவர்
நாங்கள் விடைபெறும்போது
அவரின் பச்சை பெல்ட்டில் பைசாவையும் பணத்தையும்
மட்டுமல்ல பாசத்தையும் ஒழித்துவைத்து
தேடிக்கொடுப்பார்

இந்த காலப்பிள்ளைகள் உறவுகள் தெரியாது
வளர்கிறார்கள் செல்போனில்
முகம் தெரியாதவர்களோடு
மணிக்கணக்கில் பேசிக்கிடக்கிறார்கள்
என் தாத்தா வளர்த்த பசுமை இலைகள்
பகை வளர்த்து வெளிரிக்கிடக்கிறது

முருகா சூழ்ந்திருக்கும் அரசியல் சிக்கலையும்
சிதைந்து போயிருக்கும் உறவுகளில் சிக்கலையும்
தீர்த்துவைக்க எந்த அம்பிகையாவிடமிருந்து
வேலை கடன் வாங்கியாவது வா முருகா

சில்லரைப் பசங்க

சில்லரைப் பசங்க
++++++++++++++++++
நண்பன் குரு நிறைந்த கோபத்திலிருந்தார்
விவரம் கேட்டபோது தெரிந்தது
நடத்துனரிடம் பயணச்சீட்டு போக
மீதி ஒரு ரூபாய்க்காய் கையேந்தியபோது
கை நீட்டிக்கொண்டே இருக்காதிங்க
சில்லரை இல்லை என ஏதோ சண்டை

நான் குருகிட்ட சொன்னேன்
ஒரு ரூபாதானே விட்டுவிடவேண்டியதுதானே என
அந்த சில்லரப்பய சில்லரை இல்லன்னு சொல்லாம
கையேந்தாதன்னு சொன்னா நான் என்ன அவங்கிட்ட பிச்சையா கேக்கிறேன்
இதுதான் குருவுக்குவந்த கோபம்

ஒரு நாள் நான்கு ரூபாய் பயணச்சீட்டுக்கு
100 ரூபாய் கொடுத்தேன் நடத்துனர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்
எல்லோரும் 100 ரூபாய் கொடுத்தால் நான் என்ன செய்வேன் என்றார் எரிச்சலாக
நான் அவர் காதோரம் ரகசியம் சொன்னேன் நண்பரே
கோபப்ப்டாதீர்கள் மீதியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்
சில்லரை கொடுக்கமுடியாதவங்க வயதானவர்களுக்கு பயண்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்
அமைதியாக இருந்த அன்பர்
நான் இறங்கும் நிறுத்தத்தில் வந்து மீதி சில்லரையை கொடுத்துவிட்டு
ஏற்கனவே நான் உதவிக்கொண்டுதான் உள்ளேன்
என சில்லரையை சிரிப்போடு தந்துவிட்டு சென்றார்

தகுதி இல்லாத வண்டிகளை ஓட்டச்சொல்லி
நிற்வாகம் கட்டாயப்படுத்துகிறது
பல்வேறு குறைகளோடுதான் அவர்கள் பணிசெய்கிறார்கள்
அரசியல் தொடர்புள்ளவர்கள் வேலையே செய்வதில்லை
அவர்கள் யூனியன் பெயரைச்சொல்லி தப்பிவிடுகிறார்கள்
நேர்மையானவர்களுக்குத்தான் எப்போதும் சோதனை

பொதுமக்களோடு தொடர்புகொண்டு
மக்கள் பணிசெய்பவர்களுக்கு நிறைந்த பொறுமை அவசியம்
அதே போல் அவர்களுக்கு நிறைய சங்கடங்களும் உண்டு
குறைந்த ஊதியத்தில் நல்ல குடும்பத்திலிருந்து வந்து
ஓழுக்கமாய் மக்கள் பணி செய்பவர்கள் ஏராளம்
ஒரு சிலர் தவறு செய்யலாம்

அதனால் ஒட்டுமொத்த நடத்துனர்களின் நடத்தையையும்
சந்தேகிக்க கூடாது
சில்லரை சில்லரையாக இந்த தேசத்திற்கு உழைப்பவர்கள்

புத்த பூமி யுத்த பூமியாகி

புத்த பூமி யுத்த பூமியாகி
இரத்தம் குடிக்கிறது
இலங்கையில் இறந்த புத்தம்
மியான்மரில் மெல்ல சாகத்தொடங்கி இருக்கிறது
ரோஹிங்கியா முஸ்லிம்கள் 
வழிபாடு, உயர் பதவி
கல்வி, சுகாதாரம் உரிமை மறுக்கப்பட்டது
பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சி
8 லட்சம் மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்
இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, 
மியான்மர் ராணுவத்தினர் தீ வைத்து வருகின்றனர்

வங்கதேசத்தின் எல்லையான நாஃப் நதிக்கரையில்
நாதியற்று முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மியான்மரில்
அதிக இஸ்லாமியர்கள் இறந்தது இப்போதுதான்
இராணுவ ஆட்சியில் நடக்காத கொடுமை
அமைதிக்கான பரிசு பெற்ற ஆங் சான் சூகியின்
ஜன நாயக அரசில் தலைவிரித்தாடுகிறது

மதங்களை மறுத்த மகான் புத்தர்
அவர் பெயரில் மனிதன் மதம்பிடித்தாடுகிறான்
அமைதியை வன்முறைமூலம் அடைந்துவிடாலாம்
என்று எண்ணியதன் விளைவு
சரியான இலக்கை தவரான வழிகளில்
தேடிக்கொண்டுள்ளோம்
குறைகளை விதைத்துவிட்டு
நிறைகளை அறுவடை செய்ய காத்திருக்கின்றோம்

வன்முறைகளை வாழ்க்கைமுறையாக்கி
குழந்தைகளை திறமைமிக்க திருடர்களாகவும்
கொலையாளிகளாகவும் தயார் செய்துகொண்டுள்ளோம்
அன்பை தவிர்த்து அறிவாளிகளை
வார்த்தெடுக்கின்றோம்
வலிமையை வழிபாட்டுக்குள்ளதாய்
வணங்கி மகிழ்கின்றோம்

மதம் ஜாதி இனம் தேசம் எனும்
பிரிவினை வளர்க்கிறான் வலிமைக்காக
மதம் ஓர் அடிமை சிந்தனை
பயத்தின் அடிப்படியில் எழும்பிய கோபுரம்
அச்சத்திலிருப்பவனுக்கு ஆறுதல் தரலாம்
துயரத்தை மறப்பதற்கு போதையை தரலாம்
விடிவை தருமா ?

கெட்ட வார்த்தைகள் கேட்ட வார்த்தைகள்

கெட்ட வார்த்தைகள்
கேட்ட வார்த்தைகள்
+++++++++++++++++++++
ஒருவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, 
உறவையோ, உடலின் சில உறுப்புளையோ வைத்து கெட்ட வார்த்தைகளை கட்டமைப்பது
பழக்கமாகி விட்டது. பெரிதும் பெண்களைத்தான் கேவலப்படுத்துவார்கள் 

ஒருவனை திட்ட அவனது தாயைத்தான் முதலில் அவமானப்படுத்துவார்கள்
நம் குடும்ப அமைப்பில் பெண்களைத்தான் செல்வமாகவும் வீட்டின் கெளரமாகவும் பாதுகாத்தார்கள்
பண்டைய அரசர்கள் போரில் நாட்டின் செல்வத்தையும் பெண்களையும்தான் கவர்ந்து சென்றுள்ளார்கள்

15ம் நூற்றாண்டில் காளமேகப் புலவன் பல இரட்டுற மொழிதல் கவிதைகளை இயற்றியுள்ளார் 
எந்தவொரு வார்த்தையும் வெறுப்பின் குறியீடாக ஆகும்போது மட்டுமே கெட்ட வார்த்தையாகிறது.

அரியலூர் அனிதாவிற்காக ஒரு மாதத்திற்குப்பிறகு உணர்ச்சிவசப்பட்டார் நண்பர் குரு
அவர் ஒரு கெட்டவார்த்தை களஞ்சியம் கோபத்தில்
கெட்டவார்த்தைகள் அவர் வாயில் தவமிருக்கும்

கோபம் அறிவை மறைத்துவிடுகிறது என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது
சாதாரண நிலையில் எவறும் நம்பமறுப்பார்கள் அந்த மனிதன் அப்படியெல்லாம் பேசுவாறென்று
நிதானத்தில் நல்லவனாக இருப்பதைவிட அசாதாரன நிலையில் நிதானமாக இருப்பது மேன்மை குணம்

நான் முரசொலியில் பணி செய்துகொண்டிருந்தபோது சம்மந்தமே இல்லாமல் சின்ன குத்தூசி ஐய்யா எனக்கு நண்பர் 
பக்கத்து இருக்கை என்பதால்
நான் இருபதையும் அவர் அறுவதையும் தொடும் வயது
அவரை பார்க்க பல பெரியமனிதர்கள் வருவார்கள்
அவர்களெல்லாம் எனக்கும் நண்பர்கள்
ஆனால் அங்கிருந்து வந்தபின்பு அந்த தொடர்புகளை நான் தொடரவில்லை

ஒரு நாள் சின்ன குத்தூசி ஐய்யாவை பார்க்க
தஞ்சையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார் அவரிடம் தஞ்சைவூர் பகுதி கெட்டவார்த்தைகளை
பேசச்சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார்
எனக்கோ ஆச்சரியம் ஒரு பெரியமனிதன் கெட்டவார்த்தைகளை பேசச்சொல்லி கேட்டு ரசிக்கிறாரே என
அவரிடமே கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில்
ஊரவிட்டு வந்து நிறைய வருடங்களாச்சிடா 
எங்க ஊரு கெட்டவார்த்தைகளை கேட்க ஆசையா இருக்குடா என்றார்

ஒரு நாள் தாமதமாக முரசொலியில் நுழையும் போதே
சின்ன குத்தூசி ஐய்யா தரைதளத்திற்கு வந்துகொண்டிருந்தார்
என்னைக் கண்டதும் வா நான் தலைவரை பார்க்க போகிறேன்
வந்து சும்மா என் கூட நில்லு என்றார்
எனக்கு புரிந்தது எதற்கு அழைக்கிறார் என்று
முரசொலியில் முதல் நாள் ஏதாவது தவறு நடந்தால் மறு நாள் காலை
கலைஞரிடம் அர்ச்சனை நடக்கும்
தலைவரின் அறைக்குள் நுழைந்தோம்
10 மணிக்கெல்லாம் சூரியன் சூடாகத்தான் இருந்தது

முரசொலி வளாகத்தில் சின்ன குத்தூசி ஐய்யாவிற்கு
ஒரு மரியாதை உண்டு
தம்பிக்கு மடல் எழுதிக்கொண்டே தலை நிமிர்ந்த சூரியன்
ஒரு தலைவனுக்குறிய தகுதி தவறு செய்தது யாரென்று தெரிந்துகொண்டார்
நீங்க ஏன் வந்தீர்கள் அந்த ............................. கெட்டவார்த்தை சொல்லி
அவனை வரச்சொல்லுங்கள் என்றார்
இருவரும் தப்பி பிழைத்து ஓடிவந்தோம்
நான் கேட்டேன் இப்போது மகிழ்ச்சியா என்று
என்னை முறைத்தார் சின்ன குத்தூசி
சரி எதற்கு இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்றேன்

அப்போதெல்லாம் வைக்கோவின் கட்டுரைகளை
போடாது வில்வம் என்பவரின் கட்டுரைகளைதான் முரசொலியில் போடுவார்கள்
அந்த கட்டுரையில் Pen is Mightier than Sword என்ற மேற்கோளில் PENக்கும் ISக்கும் இருந்த 
இடைவெளியை தவிர்த்துவிட்டு போட்டுவிட்டார்கள்
தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தன்னை சுற்றி நடக்கும்
தவறுகளுக்கு தீர்வு காண்பது அந்த தலைவனின் குணம்
இப்போது நடக்கும் இவ்வளவு தவறுகளை
எப்படி சகித்துக்கொண்டுள்ளார் என்பது
ஆச்சரியமே